Lumina
Psalms

Praise Ye Him All His Hosts

Psalms 148·Tamil Bible

1அல்லேலுூயா, வானங்களில் உள்ளவைகளே, கர்த்தரைத் துதியுங்கள்; உன்னதங்களில் அவரைத் துதியுங்கள்.

2அவருடைய தூதர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்; அவருடைய சேனைகளே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்.

3சூரிய சந்திரரே, அவரைத் துதியுங்கள்; பிரகாசமுள்ள சகல நட்சத்திரங்களே அவரைத் துதியுங்கள்.

4வானாதி வானங்களே, அவரைத் துதியுங்கள்; ஆகாயமண்டலத்தின் மேலுள்ள தண்ணீர்களே, அவரைத் துதியுங்கள்.

5அவைகள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவது; அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது.

Psalms 148 illustration - Psalms Chapter 148

6அவர் அவைகளை என்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நிலைக்கும்படி செய்தார்; மாறாத பிரமாணத்தை அவைகளுக்கு நியமித்தார்.

7பூமியிலுள்ளவைகளே, கர்த்தரைத் துதியுங்கள்; மகா மச்சங்களே, சகல ஆழங்களே,

8அக்கினியே, கல்மழையே, உறைந்தமழையே, மூடுபனியே, அவர் சொற்படி செய்யும் பெருங்காற்றே,

9மலைகளே, சகல மேடுகளே, கனிமரங்களே, சகல கேதுருக்களே,

10காட்டுமிருகங்களே, சகல நாட்டுமிருகங்களே ஊரும் பிராணிகளே, இறகுள்ள பறவைகளே.

Psalms 148 illustration - Psalms Chapter 148

11பூமியின் ராஜாக்களே, சகல ஜனங்களே, பிரபுக்களே, பூமியிலுள்ள சகல நியாயாதிபதிகளே,

12வாலிபரே கன்னிகைகளே, முதிர்வயதுள்ளவர்களே பிள்ளைகளே, கர்த்தரைத் துதியுங்கள்.

13அவர்கள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவர்கள்; அவருடைய நாமம் மாத்திரம் உயர்ந்தது; அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது.

14அவர் தம்முடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும், தம்மைச் சேர்ந்த ஜனமாகிய இஸ்ரவேல் புத்திரருக்கும் கொண்டாட்டமாக, தம்முடைய ஜனத்திற்கு ஒரு கொம்பை உயர்த்தினார். அல்லேலுூயா.

Chapter Complete

You have read Psalms 148

14 verses