Lumina
Psalms

When Israel Went Out of Egypt

Psalms 114·Tamil Bible

1இஸ்ரவேல் எகிப்திலும், யாக்கோபின் குடும்பம் அந்நிய பாஷைக்காரரான ஜனத்திலுமிருந்து புறப்பட்டபோது,

2யூதா அவருக்குப் பரிசுத்தஸ்தானமும், இஸ்ரவேல் அவருக்கு ராஜ்யமுமாயிற்று.

3கடல் கண்டு விலகி ஓடிற்று; யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது.

4மலைகள் ஆட்டுக்கடாக்களைப்போலவும் குன்றுகள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளினது.

5கடலே, நீ விலகியோடுகிறதற்கும்; யோர்தானே, நீ பின்னிட்டுத் திரும்புகிறதற்கும்;

Psalms 114 illustration - Psalms Chapter 114

6மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே, நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறதற்கும், உங்களுக்கு என்ன வந்தது?

7பூமியே, நீ ஆண்டவருக்கு முன்பாகவும், யாக்கோபுடைய தேவனுக்கு முன்பாகவும் அதிரு.

8அவர் கன்மலையைத் தண்ணீர்த்தடாகமாகவும், கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார்.

Chapter Complete

You have read Psalms 114

8 verses