Lumina
Joshua

Kings Conquered

Joshua 12·Tamil Bible

1யோர்தானுக்கு அப்புறத்தில் சூரியன் உதயமாகிற திசையிலே அர்னோன் ஆறு துவக்கி எர்மோன் மலைமட்டும், கிழக்கே சமபூமி எல்லையிலெல்லாமுள்ள ராஜாக்களை இஸ்ரவேல் புத்திரர் முறிய அடித்து, அவர்களுடைய தேசங்களையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்.

2அந்த ராஜாக்களில், எஸ்போனின் குடியிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோன், அர்னோன் ஆற்றங்கரையிலிருக்கிற ஆரோவேர் தொடங்கி ஆற்றின் நடுமையமும் பாதிக் கீலேயாத்துமுட்பட அம்மோன் புத்திரரின் எல்லையான யாபோக்கு ஆறுமட்டுமுள்ள தேசத்தையும்,

3சமனான வெளிதுவக்கிக் கிழக்கேயிருக்கிற கின்னரேத் கடல்மட்டும் பெத்யெசிமோத் வழியாய்க் கிழக்கேயிருக்கிற சமனான வெளியின் கடலாகிய உப்புக்கடல்மட்டும் இருக்கிறதேசத்தையும் தெற்கே அஸ்தோத் பிஸ்காவுக்குத் தாழ்வாயிருக்கிற தேசத்தையும் ஆண்டான்.

4இராட்சதரில் மீதியான பாசானின் ராஜாவாகிய ஓகின் எல்லையையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்; அவன் அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் வாசம்பண்ணி,

5எர்மோன் மலையையும் சல்காவையும், கெசூரியர், மாகாத்தியர் எல்லைமட்டும் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் எல்லையாயிருந்த பாதிக் கீலேயாத்மட்டும் இருக்கும் பாரான் அனைத்தையும் ஆண்டான்.

Joshua 12 illustration - Joshua Chapter 12

6அவர்களைக் கர்த்தரின் தாசனாகிய மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் முறிய அடித்தார்கள்; அத்தேசத்தைக் கர்த்தரின் தாசனாகிய மோசே ரூபனியருக்கும் காத்தியருக்கும் மனாசேயின் பாதிக்கோத்திரத்துக்கும் சுதந்தரமாகக் கொடுத்தான்.

7யோர்தானுக்கு இப்புறத்திலே மேற்கே லீபனோனின் பள்ளத்தாக்கிலுள்ள பாகால்காத்முதற்கொண்டு சேயீருக்கு ஏறிப்போகிற ஆலாக்மலைமட்டும், மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் சமபூமியிலும் மலைகளுக்கடுத்த புறங்களிலும் வனாந்தரத்திலும் தெற்குத் தேசத்திலும் இருக்கிறதும்,

8யோசுவா இஸ்ரவேல் கோத்திரங்களுக்குச் சுதந்தரமாகப் பங்கிட்டதுமான ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்பவர்களுடைய தேசத்தில் இருந்தவர்களும், யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரரும் முறிய அடித்தவர்களுமான ராஜாக்கள் யாரெனில்:

9எரிகோவின் ராஜா ஒன்று, பெத்தேலுக்கு அருகான ஆயியின் ராஜா ஒன்று,

10எருசலேமின் ராஜா ஒன்று, எபிரோனின் ராஜா ஒன்று,

Joshua 12 illustration - Joshua Chapter 12

11யர்மூத்தின் ராஜா ஒன்று, லாகீசின் ராஜா ஒன்று,

12எக்லோனின் ராஜா ஒன்று, கேசேரின் ராஜா ஒன்று,

13தெபீரின் ராஜா ஒன்று, கெதேரின் ராஜா ஒன்று,

14ஒர்மாவின் ராஜா ஒன்று, ஆராதின் ராஜா ஒன்று,

15லிப்னாவின் ராஜா ஒன்று, அதுல்லாமின் ராஜா ஒன்று,

Joshua 12 illustration - Joshua Chapter 12

16மக்கெதாவின் ராஜா ஒன்று, பெத்தேலின் ராஜா ஒன்று,

17தப்புவாவின் ராஜா ஒன்று, எப்பேரின் ராஜா ஒன்று,

18ஆப்பெக்கின் ராஜா ஒன்று, லசரோனின் ராஜா ஒன்று,

19மாதோனின் ராஜா ஒன்று, ஆத்சோரின் ராஜா ஒன்று,

20சிம்சோன் மேரோனின் ராஜா ஒன்று, அக்சாபின் ராஜா ஒன்று,

Joshua 12 illustration - Joshua Chapter 12

21தானாகின் ராஜா ஒன்று, மெகிதோவின் ராஜா ஒன்று,

22கேதேசின் ராஜா ஒன்று, கர்மேலுக்கடுத்த யொக்னியாமின் ராஜா ஒன்று,

23தோரின் கரையைச் சேர்ந்த தோரின் ராஜா ஒன்று, கில்காலுக்கடுத்த ஜாதிகளின் ராஜா ஒன்று,

24திர்சாவின் ராஜா ஒன்று, ஆக இவர்களெல்லாரும் முப்பத்தொரு ராஜாக்கள்.

Chapter Complete

You have read Joshua 12

24 verses